ஆம்பூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

ஆம்பூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

ரயில் மறியல் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் அனைத்தும் மத்திய சங்கங்கள் விவசாய சங்கங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாநில துணைத்தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு ஆம்பூர் தாலுகா செயலாளர் மணிமாறன், அசேன், பாரத்பிரபு எல்பி எஃப் சிஐடியு உள்ளிட்ட 11 மத்திய சங்கங்கள் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் சிறு குறு விவசாயிகளுக்கு கடனில் இருந்து விடுதலை தரும் வகையில் விரிவடைந்த கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ரயில் மறியலில் ஈடுபட ரயில் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர காவல் துறை ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் , கிராமிய காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story