வாசுதேவநல்லூரில் அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு
வாசுதேவநல்லூரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுக சார்பில் நாளை (18ம் தேதி) பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் வாசுதேவ நல்லூர் காமராஜர் சிலை முன்பு உள்ள பகுதியினை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சவுக்கை சீனிவாசன், பரமகுரு, யூனியன் சேர்மன், ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், (தெற்கு) ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு கிப்ட்சன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் லாவண்யா, துணை தலைவர் லைலா பானு, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சந்தன பாண்டி யன், பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் முத்து குமார், கட்டபொம்மன், மாரிச்சாமி, ராஜ், முனீஸ் வரன், தொழில் அதிபர் சமுத்திரவேலு, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் சரவணன், சுந்தர், கணேஷ், கண்ணன், தமீம் அன்சாரி, இளைஞரணி ஆசிக் அலி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Next Story