கடல் ஆமைகள் குறித்த விழிப்புணர்வு தோல்பாவை கூத்து
லெமூர் கடற்கரையில் கடல் ஆமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோல்பாவை கூத்து நடைபெற்றது
கன்னியாகுமாரி மாவட்ட வனக்கோட்டம், குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின் பேரில் வேளிமலை வனச்சரக எல்லைக்குட்பட்ட கணபதிபுரம், லெமூர் கடற்கரையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த தோல் பாவை கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தோல் பாவை கூத்து நிகழ்ச்சியின் மூலம் கடல் ஆமைகள் பாதுகாப்பு, நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் கடல் பாதுகாப்பு போன்றவைகளின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கடல் ஆமைகள் பாதுகாப்பினால் மக்களும் கிடைக்கும் மறைமுக பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை லெமூர் கடற்கரைக்கு சுற்றுலாவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுவட்டாரமா பகுதி மக்கள் கண்டு களித்தனர்.
Tags
Next Story