உ.வே.சா தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா

உ.வே.சா தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அரசு நூலகத்தில் உ.வே.சா, தில்லையாடிவள்ளியம்மை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு நூலகத்தில் உ.வே.சா, தில்லையாடி வள்ளியம்மை  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு நூலகத்தில் உ.வே.சா, தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் நூலக வாசகர் வட்ட தலைவர் பிரகாஷ், நூலகர் கீதா தலைமையில் நடந்தது. உ.வே.சாமிநாதன், தில்லையாடி வள்ளியம்மை திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, புத்தங்கங்கள், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. பிரகாஷ் பேசியதாவது: சென்னை, பெசண்ட் நகரில் உள்ள டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தில் பல்வேறு திருக்கோயில்களின் தல புராணங்கள் மட்டுமன்றிப் பக்தி இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளன. செல்வ வளம் மிகுந்த திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. எனினும் அவற்றைப் பற்றிய தல புராணங்களில், இலக்கியங்களில் கூட இன்னமும் அச்சுக்கு வராதவை உள்ளன. ஓலைச் சுவடியில் இருந்து இதுவரை அச்சுக்கு வராத நூல்களை அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியின் மூலம் 2002-ஆம் ஆண்டு ’அர்த்தநாரீஸ்வரர் குறவஞ்சி’ என்னும் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி நூல் வெளிவந்தது. தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப்போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார். சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று காந்தியடிகள் சொன்னார். இவ்வாறு அவர் பேசினார். நிர்வாகிகள் சண்முகம், தீனா, நந்தகுமார், அங்கப்பன், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story