விருக் ஷா குளோபல் பள்ளியில் “கூடைப்பந்து விளையாட்டு” போட்டி

விருக் ஷா குளோபல் பள்ளியில் “கூடைப்பந்து விளையாட்டு” போட்டி
X

விருக் ஷா குளோபல் பள்ளியில் “கூடைப்பந்து விளையாட்டு” போட்டி

விருக் ஷா குளோபல் பள்ளியில் “கூடைப்பந்து விளையாட்டு” போட்டி

திருச்செங்கோடு விருக் ஷா குளோபல் பள்ளியில் “கூடைப்பந்து விளையாட்டு” போட்டி 24.02.24 அன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் விருக் ஷா குளோபல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் (அணி வாரியாக – (HAWK, LION, DOLPHIN) ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டினர்.

“கூடைப்பந்து விளையாட்டு” போட்டியின் தொடக்கமாக இறைவாழ்த்து பாடப்பட்டு நம் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி செல்வி. சஸ்மிதா ஸ்ரீ அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் விருக் ஷா குளோபல் பள்ளியின் தாளாளர் ஹரிநிவாஸ் ராஜசேகரன், இயக்குநர் நிவேதா ஹரிநிவாஸ், முதல்வர் ஹேமாமாலினி, கவுன்சிலர் பூங்கொடி பாபு, துணை முதல்வர் கௌரிசங்கர், தலைமை ஆசிரியர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினைத் தொடங்கி வைத்தனர்.

கூடைப்பந்து விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் ஜெயபால் முன்னிலையில் இப்போட்டி நடைப்பெற்றது. போட்டியில் 3 சுற்றுகள் நடைப்பெற்றன. அனைத்துச் சுற்றுகளும் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்தது. கூடைப்பந்து விளையாட்டில் முதல் இடத்தினை HAWK அணியினரும் இரண்டாம் இடத்தினை DOLPHIN அணியினரும் மூன்றாம் இடத்தினை LION அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ஜெயபால், தாளாளர் ஹரிநிவாஸ் ஆகியோர் கோப்பைகளை வழங்கினர். இவ்விளையாட்டில் சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் நடைப்பெற்ற கூடைப்பந்து விளையாட்டில் நம் பள்ளி மாணவர்கள் விளையாடி முதல் இடத்தினைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறுவயதினை கொண்ட எங்கள் பள்ளி (நான்காம் வகுப்பு) மாணவன் செல்வன். பிரஜித் ஸ்ரீமான் இறுதியாக நட்பின் அடிப்படையில் நடைப்பெற்ற “கூடைப்பந்து விளையாட்டு போட்டிக்கு நடுவராக இருந்து போட்டியினை நடத்திக் கொடுத்தது நம் பள்ளிக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எங்கள் பள்ளி என்றும் இளம்வயது மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்றும் முன்னோடியாக இருக்கிறது. போட்டியின் இறுதியாக எங்கள் பள்ளி ஆசிரியை செல்வி ரசிகப்பிரியா நன்றியுரை வழங்க போட்டி இனிதே முடிவடைந்தது.

Tags

Next Story