வாகனங்களை அனுமதிக்காததால் பக்தர்கள் சாலை மறியல்
சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவிலில் வருடா வருடம் மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இந்த விழாவிற்கு சத்திய மங்கலம், கோயமுத்தூர், சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
பக்தர்கள் அடர்ந்த வன ப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த வருட திருவிழாவுக்கு நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது, பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதி களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன 100 வாகனங்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட 20 வகை யான நிபந்தனைகள் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று கரு வண்ணராயர் கோவில் மாசி மக மற்றும் பொங்கல் திருவிழா தொடங்கியது. காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் வந்திருந்தனர். வாகனங்களுக்கு அளிக்கப்பட்ட பாஸ் அடிப்படையில் தீவிரமாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் வாகனங்களை காராச்சிக்கொரை சோதனை சாவடியில் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் பக்தர்கள் வந்து வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுமார் மேற்பட்ட வாகனங்கள் சோதனை அனுமதிக்க படாத வாகனத்தில் வந்த பக்தர்கள் தங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பகுதி முழுவதும் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனக் கூறிய பேச்சுவார்த்தை ஆனால் தங்களது வாகனங்களை அனுமதி அளிக்க வேண்டும் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை செய்த போது பொதுமக்கள் வந்த வாகனத்தில் மதுபாட்டல்கள் இருந்ததால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.