ராஜபத்மாபுரத்தில் சிமென்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை.

ராஜபத்மாபுரத்தில் சிமென்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை.

திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரத்தில் சிமென்ட் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரத்தில் சிமென்ட் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரம் கிராமம். இங்கு பெருமாள் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலை நடந்து செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ளதால் அப்பகுதியினர் அவதியடைந்து வருகின்றனர்.

அதேபோன்று வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலத்தில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், அப்போது சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக புலம்புகின்றனர். இந்நிலையில் தங்கள் தெருவில் சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைப்பதுடன் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என,அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Next Story