இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடு கட்டும் பணி: முதல்வர் தொடங்கி வைப்பு

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடு கட்டும் பணி: முதல்வர் தொடங்கி வைப்பு

முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

கேத்துநாயகன்பட்டியில் 299.65 லட்சம் மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடு கட்டுதல் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்து நாய்க்கன்பட்டி பகுதியில் புதிதாக அமைய உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடு கட்டுதல் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு13 அலகுகள் மதிப்பீடு ₹299.65 லட்சம் மதிப்பீட்டில் தர்மபுரி பகுதியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பணியினை துவக்கி வைத்தார்

இந்த நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், உதவி பொறியாளர் கண்ணாயிரம், மாதையன், அருன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் முருகன், பிரபு, அன்பு, ஆறுமுகம் ஒப்பந்ததாரர் பெருமாள்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

Tags

Next Story