விவசாயிகளை மிரட்டி லஞ்சம் பெற்றதாக டிஎஸ்பி மீது புகார்

விவசாயிகளை மிரட்டி லஞ்சம் பெற்றதாக டிஎஸ்பி மீது புகார்

புகார் மனு 

விவசாயிகளை மிரட்டி லஞ்சம் பெற்றதாக டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி 16ந் தேதி ஆர்ப்பாட்டம். 

குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா, தங்கப்பன், தேவதாஸ், தாணுபிள்ளைமற்றும் திரளானோர் இன்று நாகர்கோவில் எஸ்.பி. சுந்தரவதனத்திடம் புகார் மனு அளித்தனர். அதில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 10ந் தேதி கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக விவசாய பிரதிநிதகள், மற்றும் விவசாயிகளுடன் சென்றோம்.

அப்போது போலீஸார் எங்களை வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்களுடன் வழியில் ஏறிவந்த 4 விவசாயிகள் அந்த வேனில் இருந்ததால் சுற்றுலா சென்ற பெண்கள், 3 வயது குழந்தையையும் கைது செய்தனர். அவர்கள் வந்த வேனையும் பிடித்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் வைத்திருந்தார். மேலும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட விவசாய பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கப்படவில்லை.

மேலும் வேன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.50000 கேட்டனர். பின்னர் பேரம் பேசி ரூ.30000 வழங்கியதால் டிஎஸ்பி வேனை விடுவித்தார். இதுதொடர்பாக டிஎஸ்பி மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது வாங்க மறுத்தனர். ஆன்லைனில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே விவசாயிகளிடம் பேரம் பேசி லஞ்சம் பெற்ற டிஎஸ்பி மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி வருகிற 16ந் தேதி காலை 10.30 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குமரி பாசனத்துறையினர், மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Tags

Next Story