நாகர்கோவிலில் நள்ளிரவில் ஏடிஎம் மைய கதவை திருடிய வாலிபர்  

நாகர்கோவிலில் நள்ளிரவில் ஏடிஎம் மைய கதவை திருடிய வாலிபர்  

ஏடிஎம் மையம்

கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று நள்ளிரவில் ஒரு மணி அளவில் இந்த ஏடிஎம் மையத்துக்குள் வாலிபர் ஒருவர் புகுந்தார். அவர் ஏடிஎம் மையத்தின் கதவருகே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார்.

பின்னர் அந்த கதவை ஸ்குரு டிரைவர் மூலம் கழற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமரா வழியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் கவனித்து, உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் கூறினார். இதை அடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஏடிஎம் கதவை கழட்டி அங்கிருந்து கொண்டு செல்ல முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரே வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில் அவர் வடசேரி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (48) என்பது தெரிய வந்தது. இவர் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக கடைகளில் வெளியே உள்ள பொருட்கள், கடைகளில் உள்ள கதவுகள் உள்ளவற்றை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சமீப காலமாக ஏடிஎம் மையங்களில் உள்ள கதவுகளை குறிவைத்து திருடி வருகிறார் ஏற்கனவே வடசேரி பகுதியில் 2 ஏடிஎம் மையங்களில் கதவுகள் திருடப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story