கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இல்லாமல் குடும்பத்தோடு வந்து வேட்பு மனு தாக்கல் செய்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்

கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இல்லாமல் குடும்பத்தோடு வந்து வேட்பு மனு தாக்கல் செய்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்

வேட்புமனு தாக்கல் 

கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இல்லாமல் குடும்பத்தோடு வந்து வேட்பு மனு தாக்கல் செய்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 20 தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 20 தேதி முதல் நாள்தோறும் சுயேட்ச்சை வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்து வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கூடிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர், பாஜக வேட்பாளர்,

அதிமுக வேட்பாளர் உள்ளிட்டோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தனர். திமுக கூட்டணியில் இருக்க கூடிய காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் என்பவர் நாளை வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், திடீரென இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் யாரும் இல்லாமல் தனது குடும்பத்துடன் அதாவது, தனது மனைவி, 2 மகள் , 1 மகனுடன் வந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். வழக்கமாக கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளுடன் வந்து தான் வேட்பாளர்கள் , வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது வழக்கமான ஒன்று இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத் அவர்கள் தனது குடும்பத்தோடு வந்து தற்போது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

மேலும் கூட்டணி கட்சியினர் இல்லாமல் குடும்பத்தோடு வந்து கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத் வேட்பு மனு தாக்கல் செய்தது , சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story