அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் !
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் கணேஷ்குமார் கலந்து கொண்டு காசநோய் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். மேலும் வீரபாண்டி காசநோய் மைய மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக்குமார், சுகாதார பணியாளர் ஆண்ட்ரூ சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தனர். இந்த முகாமில் துறை மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ஜெயபாலன் மற்றும் மெய்பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story