கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

தேர்தல் புறகணிப்பு 

தங்கள் ஊராட்சியை திருவோணம் வட்டத்தில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்
பேராவூரணி அருகே இரு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பட்டுக்கோட்டை தாலுகாவில் இருந்த வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு, உக்கடை, பீமாபுரம், இடையாத்தி வடக்கு, இடையாத்தி தெற்கு ஆகிய வருவாய் கிராமங்கள், சில மாதங்களுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட திருவோணம் தாலுகாவில் இணைக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அருகிலுள்ள பட்டுக்கோட்டைக்கு சென்று வந்த நிலையில், தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய வட்டமான திருவோணம் வெகு தொலைவில் உள்ளதால், தங்களுக்கு சிரமமாக உள்ளது. சரியான போக்குவரத்து வசதி இல்லை எனவும், தங்கள் பகுதியை மீண்டும் பட்டுக்கோட்டை வருவாய் வட்ட பகுதியிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோரிக்கை கண்டு கொள்ளப்படாததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி, இடையாத்தி ஊராட்சி பொதுமக்கள், ஒருங்கிணைந்த போராட்டக் குழு மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள் சார்பில், இப்பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதி போராட்டக் குழுவினர், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர்.

Tags

Next Story