மஞ்சள் வர்த்தகம்

மஞ்சள் வர்த்தகம்

மஞ்சள் வர்த்தகம்

ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.79 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. 803 விவசாயிகள் 3,865 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 17 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். விராலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 17, 389 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 22,223 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 14,689 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 16,427 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 28,569 அதி பட்சமாக 33,869 ரூபாய் விலை போனது.

3865 மூட்டைகள் மூலம் 3 கோடியே 79 லட்சத்திற்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் மஞ்சள் வந்து 2000 மூட்டை குறைந்த நிலையில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக நான்காயிரம் ரூபாய் வரை கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மஞ்சள் விலை தற்போது கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story