நானே ராஜா நானே மந்திரி என அமைச்சர் எதுவும் செய்யலாம்:பொன்.ஆர்

பரப்புரை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சர் மனோதங்கராஜ் பேசும்போது விஜய் வசந்த் எம்.பி உடன் இருந்தார்.

அப்போது நான்கு வழி சாலை பணி நிற்க என்ன காரணம் என்று கேட்கும் போது ஆர்பிட்ரேஷனில் பணம் கொடுக்காததால் நின்றுவிட்டதாக கூறியுள்ளார். நான் மந்திரியாக இருந்தவரை பணம் கொடுத்து விட்டேன்.

அதன் பிறகு அவர் தான் எம் பியாக இருந்தார். அப்படியெனில் அவர்தான் பணம் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த பணிகள் நிறுத்தம் காரணமாக 110 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பழைய கான்ட்ராக்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் வசந்துக்கு எதுவுமே தெரியவில்லை. விஜய்வசந்த் பேசுவது அவருடைய கருத்தே இல்லை. மனோ தங்கராஜின் ஒலிவாங்கியாகத்தான் அவர் செயல்படுகிறார்.

குமரி மாவட்டத்திற்கு பிரதமர் வந்தது பிரயோஜனம் இல்லை என்றும், அமித்ஷா வந்து ரோடு ஷோ நடத்தினால் ரோடு வெறிச்சோடி இருக்கும் என்று அவர்கள் கூறியதாக கேட்கிறீர்கள்.

அமித்ஷா வருகையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது. குமரி மாவட்டத்தில் தன்னைத் தவிர யாரும் முக்கியத்துவம் பெறக்கூடாது என்பதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் செட்டப் செய்து, நானே ராஜா நானே மந்திரி என்ற எண்ணத்தில் ஏதாவது செய்தாலும் செய்யலாம். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags

Next Story