கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டபதியில் தேர் பவனி

கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டபதியில் தேர் பவனி

கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டபதியில் தேர் பவனி


கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டபதியில் தேர் பவனி இன்று நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, தா்மங்கள் நடைபெற்று வந்தது.

கலிவேட்டை: 11-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் தொட்டு இழுத்தனர்.

இந்த தேர் ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் முட்டப்பதி வந்து வடக்கு வாசலில் கலிவேட்டை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னதா்மம் நடைபெற்றது. ஏப்ரல் 2 ம் தேதி நாளை அதிகாலை 4 மணிக்கு திருக்கொடி இறக்குதல், காலை 5 மணிக்கு தானதா்மங்கள் நடைபெறுகிறது.

Tags

Next Story