கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகன மோதி விபத்து

காங்கேயத்தில் இருந்து விலகல் செல்லும் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம் பகுதியில் பல்லடம் முதல் வெள்ளகோவில் வரை உள்ள சாலை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இருவழி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்த இரண்டு ஓரங்களிலும் பறிக்கப்பட்டும், தரைப் பாலங்கள் அமைக்க சாலையின் நடுவே பறிக்கப்பட்டும் வருவதால் வாகனங்கள் எதிரெதிர் திசையில் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பிரதான சாலையாக உள்ளதால் வாகனங்கள் குறுகிய சாலையில் எதிரெதிர் திசையில் செல்ல முடியாமல், போதுமான இடமில்லாமல் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது விபத்து ஏற்படுகிறது.இந்த நிலையில் நேற்று மதியம் கோவை செல்லும் அரசு பேருந்து முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்திலேயே காயமடைந்த சேகர் வயது 53 என்பவரை மருத்துவமனை அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். மேலும் பெரும் உயிரிழப்புகள்‌ நடைபெறும் முன்னரே விரைந்து சாலை பணிகளை முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு‌ பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story