பிரசவ அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை!

பிரசவ அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை!
X

பிரசவ அறை

வெங்குபட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வெங்குப்பட்டு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு, தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு டாக்டர், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். பிரசவத்துக்காக தனிப்பிரிவு கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டிேய வைத்துள்ளனர். இதனால் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். பிரசவத்துக்காக நெடுந்தொலைவு செல்ல வேண்டி உள்ளது. எனவே வெங்குப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூட்டிேய கிடக்கும் பிரசவ அறையை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story