கிரைன் வண்டி மூலம் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்பு!
மாலை
கிரைன் வண்டி மூலம் ஆளுயர மாலை அணிவித்து திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை வரவேற்ற மழையூர் கிராம அதிமுக பொறுப்பாளர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் கிராமத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா வாக்கு சேகரித்தார். திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ப.கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் கிராமத்தில் பிரச்சாரம் செய்தார் அப்பொழுது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட வேட்பாளர் கருப்பையா, பின்னர் பொதுமக்களிடம் பேசும் பொழுது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மற்ற வேட்பாளர்கள் வருவார்கள் போவார்கள் அதன் பின் இங்கு வரக்கூட மாட்டார்கள் மழையூர் என்ற ஒரு கிராமத்தையே மறந்து விடுவார்கள்.
ஆனால் நான் அப்படி இல்லை உங்கள் வீட்டுப் பிள்ளை தங்கள் ஊரில் நடக்கும் எந்த ஒரு விழா இருந்தாலும் முதல் நாளாக நிற்பேன், நின்று கொண்டிருக்கின்றேன்.
அது போல் கிராமத்தில் உள்ள சாலை வசதி, குடிநீர் வசதி, அதிமுக ஆட்சியில் தான் தற்பொழுது இப்பகுதி மக்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர் .
எங்கள் பகுதிக்கு குடீநீர் வசதி, சாலை வசதி, மருத்துவமனை என கோரிக்கை வைத்தனர் . நான் வெற்றி பெற்ற பிறகு முதல் வேலையாக இவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவேன் ஆகவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றியை பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கருப்பையாவுக்கு கிரேன் வண்டி மூலம் ஆளுகிற மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.