சிவகங்கை தொகுதி ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது:பாஜக வேட்பாளர்

சிவகங்கை தொகுதி ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது:பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர் 

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது என பாஜக வேட்பாளர் தேவநாதன் விமர்சனம் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், திருப்பாச்சேத்தி, கானூா், பழையனூா், பொட்டப்பாளையம், பூவந்தி, வெள்ளக்கரை, வாகைக்குளம், மழவராயனேந்தல், லாடனேந்தல், கொந்தகை, மணலூா் ஆகிய இடங்களிலும், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல்,

கட்டிக்குளம், வேம்பத்தூா், இடைக்காட்டூா், கீழமேல்குடி, வன்னிக்குடி, சிப்காட், கொன்னக்குளம், மேலநெட்டூா், இளையான்குடி ஒன்றியம், முனைவென்றி, குறிச்சி, தாயமங்கலம், சாலைக்கிராமம், சூரணம், மேலாயூா், விசவனூா், சீலாவதி, குமாரக்குறிச்சி, திரும்பச்சேத்தி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக சிவகங்கை மக்களவைத் தொகுதி ஒரே குடும்பத்தினரின் பிடியில் சிக்கியிருக்கிறது.

இந்தத் தொகுதியில் இதுவரை எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிகளில் இந்தத் தொகுதி எம்.பி.யாக இருந்து மத்திய அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ப.சிதம்பரம் பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம். பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் தமிழகத்தில் மத்திய அரசு சாா்பில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பாஜக வெற்றி பெற்றால் தான் பல தொழிற்சாலைகளை இங்கு கொண்டுவர முடியும். ஒரே குடும்பத்தினரிடம் சிக்கியுள்ள சிவகங்கை தொகுதியை மீட்டு, தொகுதி வளா்ச்சி அடைய இந்தத் தோ்தலில் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என பேசினார்

Tags

Next Story