புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
மழை
தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ளது கடந்த 15 நாட்களுக்கு மேல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் வாட்டி வருகிறது கிட்டத்தட்ட 105° பாரங்கீட் மேல் இந்த வெயில் அடிப்பதால் பொதுமக்கள், சிறு குழந்தைகள், முதியோர்கள், கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தொண்டர்கள் இந்த வெயிலால் கடும் அவதி வுற்று வருகின்றனர் இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனத்த மழை பெய்தது.
இம்மழையானது புதுக்கோட்டை நகர் பகுதி மட்டுமில்லாமல் சுற்றுப்புற பகுதிகளான மச்சுவாடி, மாலையிடு, திருவப்பூர், திருக்கோகரணம், கேப்பரை, உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை பெய்தது இதனால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டது.
மேலும் மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடங்கள் விட்டு வீடு திரும்பும் மாணவ, மாணவியர் இந்த மழையில் நனைந்தபடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.