இராசிபுரம் நகர வளர்ச்சி மன்ற தலைவர் பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர வளர்ச்சி மன்ற தலைவர்  பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர வளர்ச்சி மன்ற தலைவர் பாலு அவர்கள் பிறந்த நாள் விழா கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் நகர வளர்ச்சி மன்ற தலைவருமான முன்னாள் கவுன்சிலர் வி பாலு அவர்கள் பிறந்த நாள் விழா மேட்டு தெரு எழிலகம் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், நகரவாசிகள், வணிகர்கள் உள்ளிட்ட திராவிட விடுதலைக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், என ஏராளமானோர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து மாலைகள் சூட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நகர வளர்ச்சி மன்ற தலைவர் முன்னாள் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி. பாலு அவர்கள் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

Tags

Next Story