குமரியில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல் வைப்பு

குமரியில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு  சீல் வைப்பு

அறைக்கு சீல் வைப்பு

குமரியில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்றம் மற்றும் விளங் கோடு சட்டமன்ற இடைதேர்தல் நேற்று நடைபெற்றது. கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு , நாகர்கோவில் , கன்னியாகுமரி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1698 வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது. குமரியின் மொத்த வாக்காளர்கள் மொத்தம் 15.57 லட்சம் பேர் ஆவார்கள்.

நடைப்பெற்று முடிந்த பாராளுமன்றம் மற்றும் விளங் கோடு சட்டமன்ற இடைதேர்தல் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கோணம் பொறியியல் கல்லூரியில் நேற்று இரவு முதல் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம், மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் EVM வைக்கப்பட்டுள்ள அறைக்கு முத்திரை வைத்தனர்.

Tags

Next Story