வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

தற்கொலை

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மகன் சிபி (27). பி.ஏ.இஞ்சினியரிங் படித்துள்ளார். படித்து விட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் மன விரக்தியில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்ற சிபி வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை ராஜேந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் மகனை‌ காணாததால் வீட்டிற்கு அருகே தோட்டத்தில் உள்ள பம்ப் செட் ரூருமிற்கு சென்று பார்த்தபோது அங்கு பம்ப் செட் ரூமில் இருந்த இரும்பு கம்பியால் கயிற்றின் மூலம் சிபி தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உடனடியாக மகனை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிபி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ராஜேந்திரன் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story