கழிவுநீர் கால்வாயை துார் வாரி, சீரமைக்க வலியுறுத்தல்

கழிவுநீர் கால்வாயை துார் வாரி, சீரமைக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாயை துார் வாரி, சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
மதுராந்தகத்தில் கழிவுநீர் கால்வாயை துார் வாரி, சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தபட்டுள்ளது.

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு பகுதியில், அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் திங்கட்கிழமைகளில் வார சந்தை நடைபெற்று வருகிறது. மருத்துவமனை எதிரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில், மருத்துவமனை சாலை, சுந்தர்ராம் நகர் பகுதி கழிவுநீர் கால்வாய்களில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

தேங்கியுள்ள கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் கால்வாய் துார் வாரப்படாததால், கால்வாய் பகுதியில் மண் திட்டுக்கள் நிரம்பி உள்ளன.தேங்கியுள்ள கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் கால்வாய் துார் வாரப்படாததால், கால்வாய் பகுதியில் மண் திட்டுக்கள் நிரம்பி உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்துள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனால், கழிவு நீர் கால்வாயில், வெயில் காரணமாக நொதித்தல் ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. அவ்வப்போது, நகராட்சி துப்புரவு பணியாளர்களால் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. எனவே, கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், கழிவுநீர் கால்வாயை துார் வாரி, சீரமைக்க நகராட்சி நிர்வாகத்தினர், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story