வனப்பகுதியில் அமைக்கப்படும் சாலைகளில் முறைகேடு: எம்எல்ஏ குற்றச்சாட்டு
செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ
சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் (அதிமுக) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் பொழுது ; சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வனக்கோட்டம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
வனத்துறை சார்பில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மலை கிராம பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது முறையாக பதிலளிக்க மறுப்பதாகவும்,
இதுகுறித்து மலை கிராம மக்களும் சாலை எங்கே போடுகிறார்கள். என மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் எங்களிடம் கேட்கின்றனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் ஒப்பந்ததாரர் அமைச்சருக்கு 40%கமிஷன் கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சாலை எங்க போடப்படுகிறது என கூட தெரிவிக்க மறுப்பதாகவும் இதனை முழுதாக மறைக்க பார்க்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
மேலும் ஆத்தூர் கெங்கவல்லி,ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர்களோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் அதேபோல் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவதை தடுக்கும் பொருட்டு வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.