ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நிழல் குடை அமைத்து குடிநீர் வழங்கும் பள்ளி நிர்வாகம்

ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நிழல் குடை அமைத்து குடிநீர் வழங்கும் பள்ளி நிர்வாகம்

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நிழல் குடை அமைத்து குடிநீர் வழங்கும் பள்ளி நிர்வாகம்

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை இன்று நடத்த உள்ளது. இதற்காக தேர்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள் மதியம் 1.30 மணிக்குள் சென்று விட வேண்டும்.

பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மதம் சார்ந்த ஆடைகள் அணிந்து வருவோர் சோதனைக்கு வசதியாக 12.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் பள்ளியில் 1200 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அக்னி நட்சத்திரத்தையும் பொருள்படுத்தாமல் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து தேர்வு மையத்திற்கு அனுப்பிவிட்டு, வெளியே நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதை அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை அழைத்துச் சென்ற பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அமர்வதற்காக நிழற்குடைகள் அமைத்து ஆங்காங்கே தண்ணீர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தேர்வு முடியும் வரை நிழலில் இளைப்பாறவும் ஏதுவாக அமைந்துள்ளது.

மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் நிலை அறிந்து சிறப்பு ஏற்பாடுகள் செய்ததனால் பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags

Read MoreRead Less
Next Story