தர்மபுரியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜக ஆலோசனை கூட்டம்

நாட்டின் ஒருமைப்பாட்டை அவமதித்தற்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் பாஜக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

தர்மபுரி செட்டிக்கரை பாஜக அலுவகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை அவமதித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ராஜினமா செய்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் சாம்பிட்ரோடா, ராஜினமா செய்யும் முன், இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் உள்ளவர்கள் சீனர்களை போன்றும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர் போல் உள்ளதாக, இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் பிரித்து பேசினார்.

இவரது பேச்சுக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.சாம்பிரிட்டோ பேச்சுக்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவிப்பதுடன், நாட்டின் ஒருமைப்பாட்டை அவமதித்தற்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கட்ராஜ், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் குமார், ஒபிசி மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மண்டல தலைவர்கள் மதன், சின்னச்சாமி உட்பட, பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story