தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி 

தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இத்திருத்தல பெருமான் பெயர் கொண்டு முன்பு முக்தீஸ்வரம் என்றும், பாலாற்றங்கரையில் உள்ளதால், நதிபுரம் என்றும் ராஜராஜசோழன் காலத்தில் ராஜராஜநல்லுார் என்றும் அழைக்கப்பட்டது.

மேலும், ஈசனின் கருணை வேண்டி இங்கு வீற்றிருக்கும் அம்பாள், இத்திருத்தலத்தில் பல காலம் தங்கி, அனைவருடைய பசியை போக்க இங்கு அன்னக்கூடம் அமைத்து, அனைவருக்கும் அன்னமிட்டு பசி ஆற்றியதால், இவ்வூருக்கு பசி ஆற்றுார் என்றும், அதுவே மறுவி ஆத்துார் என, தற்போது அழைக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்ட உளிபடா திருமேனி பல முனிவர்கள், சித்தர்கள், அருளாளர்கள்,

ஆதிசங்கரர் உள்ளிட்டோர், இத்திருத்தலத்தில் தங்கி, தொண்டுகள் புரிந்து வந்துள்ளனர். காஞ்சி மஹா பெரியவர் பல நாட்கள் இத்திருத்தலத்தில் தங்கி சாதுர்மாசிய விரதம் மேற்கொண்டு, சிறப்பு பூஜைகள் செய்தது வந்துள்ளார். நம்முடைய துன்பத்தை நீக்கி ஞானமே வடிவமாகிய சிவ பரம்பொருள், நம்மை, கருவாகி பின் உருவாகி, பிறவியில் உழன்று கொண்டிருக்கும் நாம் மீண்டும் கருவாகாமல், உருவாகாமல் இருக்க கருணை கொண்டு முக்தீஸ்வரர் என, திருநாமம் கொண்டுள்ளார்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடைபெறும். நடப்பாண்டில், இன்று மாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், திருமுறை பாராயணம் நடந்தது. இதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு, 63 நாயன்மார்களுடன், பஞ்சமூர்த்திகள் கயிலாய காட்சி மற்றும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், முக்தீஸ்வரர் சேவா சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் செய்துள்ளனர்.

Tags

Next Story