வேதகிரீஸ்வரர் கோவில் குளத்தில் உழவாரப்பணி

வேதகிரீஸ்வரர் கோவில் குளத்தில் உழவாரப்பணி

உழவார பணி நடைபெற்றது

திருகழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் குளத்தில் உழவாரப்பணி

இந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. அதன் முக்கிய தீர்த்தம் சங்குதீர்த்தகுளம். மார்கண்டேய முனிவர், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, இக்குளத்தில் அதிசய சங்கு தோன்றி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுகிறது.

கடைசியாக, கடந்த மார்ச் 7-ம் தேதி தோன்றியது. குருபகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசிக்கு பெயரும் நாளில், குளத்தில் புஷ்கரமேளா, லட்சதீப விழா நடக்கும். இத்தகைய குளத்தை முறையாக பராமரிக்காமல் முற்றிலும் மாசடைந்துள்ளது. இதில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை குவிந்து சீர்கேடாக மாறியது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக குளத்தை பார்வையிட்டு, குப்பை கழிவுகளை அகற்றி பராமரிக்க அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஏற்பாட்டில், சேலம், சதுர்கால பைரவர் உழவாரப் பணி குழுவினர், நேற்று குளத்தில் குவிந்திருந்த பாசி, கொடிகளை அகற்றி துாய்மைப்படுத்தினர். இன்றும் உழவாரப் பணி நடக்கிறது.

Tags

Next Story