மருத்துவமனை சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
மதுரவாயல் மருத்துவமனை சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரவாயல் மருத்துவமனை சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், சின்ன போரூர் மருத்துவமனை சாலையில், நகர்ப்புற சமுதாய மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு மகப்பேறு, நம்பிக்கை மையம், தீவிர சிகிச்சை உட்பட, பல்வேறு வார்டுகள் உள்ளன. பிரசவம் மற்றும் பரிசோதனைக்காக தினமும், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் வந்து செல்கின்றனர். மேலும், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், நெற்குன்றம், காரம்பாக்கம், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், வளசரவாக்கம் -- ஆற்காடு சாலையில் இருந்து, நகர்ப்புற சமுதாய மருத்துவமனைக்குச் செல்லும் மருத்துவமனை சாலையில் எப்போதும் போக்குவரத்து இருக்கும். இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேல் மூடியில் இருந்து கழிவுநீர் வழிந்தோடி மழைநீர் வடிகாலில் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் சமீபத்தில் தான், பாதாள சாக்கடை திட்டம் செயல்முறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story