தஞ்சையில் கால்நடை வளர்ப்பு இலவசப் பயிற்சி

தஞ்சையில் கால்நடை வளர்ப்பு இலவசப் பயிற்சி

கோப்பு படம் 

தஞ்சையில் ஜூன் 24, 25, 26 - இல் கால்நடை வளர்ப்பு இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி ஜூன்.24, 25,26 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவர் கே. ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்து ஜூன்.24 ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து 25 ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து 26 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு, 04362 - 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story