அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

 கைது

அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது. போலீசார் நடவடிக்கை.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த கருமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அவரது மோட்டார் சைக்கிளை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் , பிரபாகரனின் மோட்டார் சைக்கிளை திருடியது, சேலம் அருகே தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தாமோதரன் (21) என தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story