சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.கவுன்சிலர்கள் கடும் வாக்கு வாதம்...

X
சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.கவுன்சிலர்கள் கடும் வாக்கு வாதம்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் துணைத் தலைவர் விவேகன் ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் உறுப்பினர் முருகன் பள்ளபட்டி ஊராட்சியில் காமராஜபுரம் காலனி லிங்கபுரம் காலனி 56 வீட்டு காலனி ஆகிய பகுதிகளில் 20 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது அப்பகுதி மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறார்கள் எனவே குடிநீர் விநியோகம் சீராக வழங்க வேண்டும் என்றார் துணைத் தலைவர் விவேகன்ராஜ் பேசுகையில்,பள்ளபட்டி ஊராட்சியில் பணிபுரியும் குடிநீர் திறந்து விடுபவர்கள் அனைவரையும் வரவழைத்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார் உறுப்பினர் மாரிமுத்து வாடிவூரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பல மாதங்களாக மின் இணைப்பு கொடுக்காமல் உள்ளது உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார். மேலும் இக்கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர் பத்மினி உள்ளிட்டோர் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

