கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி!

கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி!
X
அரசு செய்திகள்
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே கோவிலுாரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கடந்த 1997ம் ஆண்டு குடியிருப்புகள் கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில்,நாராய ணசாமி என்பவரது 40 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் உரிய இழப்பீடு கேட்டு புதுகை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நாராயணசாமி வழக்கு தொடர்ந்தார். இழப்பீடு தொகை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் உத்தரவை நிறை வேற்றக்கோரி மனுதாரர் தரப்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 666 இழப்பீடு தொகை வழங்கப்படாத தால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்யு மாறு கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் பொருட்களை ஜப்தி செய்வதற்காக மனுதாரர் தரப்பினருடன் கோர்ட் ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களிடம் பிற் படுத்தப்பட் டோர் நலத்துறை அதிகாரி கள் பேச்சவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு தொகை விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஜப்தி நடவ டிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Next Story