நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அறிவிப்பு

சங்ககிரி: வட்டார நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அறிவிப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாரத்தில் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்க கந்தகம்,சுண்ணாம்புசத்து இடுவதன் அவசியம் குறித்து சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் விமலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. பயிரின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், அமினோ அமிலம் மற்றும் புரத உற்பத்திக்கும், • பச்சையம் உருவாகுவதற்கும் நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகரிக்கவும், தழைச்சத்து உபயோகிப்புத் திறனை அதிகரிக்கவும் கந்தக சத்து தேவைப்படுகின்றது. அதே போல் சுண்ணாம்புச் சத்து உபயோகப்படுத்துவதினால் கடலை விழுதுகள் மண்ணில் இறங்கியவுடன் இளம் காய்களால் நேரடியாக சுண்ணாம்புச் சத்து எடுத்துக்கொள்கின்றது. இலை, தண்டு, விழுது மற்றும் வேரின் உறுதி தன்மைக்கு இச்சத்து அவசியமாகிறது. காய்களில் விதை பருப்புகள் முழுமையாக கால்சியம் உருவாக துணைபுரிகிறது. கந்தகம், சுண்ணாம்புச் சத்து நிறைந்த ஜிப்சத்தை எவ்வாறு நிலத்தில் இடுவது:- • மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் ஜிப்சத்தை பிரித்து இட வேண்டும். ஈர மண்ணில் ஜிப்சத்தை இட வேண்டும். அதிகளவு மழை பெய்யும் பொழுது ஜிப்சம் இடுவதை தவிர்க்க வேண்டும். காலகஸ்தி நோய், காய் அழுகல் நூற்புழு பகுதிகளுக்கு 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைப்பதற்கு முன்னரும் மீதமுள்ள 200 கிலோவைப் பயிர் பூக்கத் தொடங்கும் போதும், விதைத்த 30-45 நாட்களுக்குள் மழை வந்தவுடன் மேலுரமாக இட்டுமண் அணைக்க வேண்டும். பிரித்து இடும்போது அடியுரமாக இட்டது விதை எளிதாக முளைத்து வரவும், ஆரம்ப காலத்தில் செடி வளர்வதற்குத் தேவையான கந்தகம் மற்றும் சுண்ணாம்புச் சத்தையும் அளிக்கிறது. • மேலுரம் இடுவது விழுதுகள் இறங்குவதற்கு ஏதுவாகவும், திரட்சியான பருப்புகள் உருவாவதற்கும், எண்ணெய்ச்சத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. மேலும் ஜிப்சம் தேவைப்படும் விவசாயிகள் சங்ககிரி, தேவூரில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பெற்று பயன்பெறுமாறு அதில் தெரிவித்துள்ளார்.
Next Story