குண்டாறு கிருதுமால் தடுப்பணை ஷட்டரை திறக்க கோரி மனு
Sholavandan King 24x7 |19 July 2024 3:23 PM GMT
விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் மனு
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மதுரை மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த வகையில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன்,விருதுநகர் மாவட்ட விவசாய சங்கம் சிவசாமி வேளாண்துறை கன்வீனர் ஜெயக்குமார் தோப்பூர் ஊராட்சியை சேர்ந்த விஜயாகுமரேசன் திருமால் ஊராட்சி மன்ற தலைவர் ராசு பேச்சி மற்றும் தங்கம் கல்லுப்பட்டி கண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் மதுரை மாவட்டம் குண்டாறு கள்ளிக்குடி தாலுகா வீரப்பெருமாள்புரம் தடுப்பணை ஷட்டரை நிரந்தரமாக திறந்து பாதுகாப்பு அளிக்க கோரி மனு அளித்தனர்.தலைமுறை புதுப்பினத்தை அதிகாரியிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் பயனற்ற நிலையில் உள்ளதாகவும் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வருவாய் கோட்டாட்சியர்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story