மூக வேறுபாடு காட்டாமலும் அனைவருடனும் நட்பாக பழகவேண்டும்
Pudukkottai King 24x7 |20 July 2024 5:54 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாணவர்கள் யாருடனும் சமூக வேறுபாடு காட்டாமல் நட்பாகப் பழக வேண்டும் என்றார் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பரத் சீனிவாஸ். புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: மாணவர்கள் பிற மாணவர்களுடன் சகோதர மனப்பான்மையுடனும், சமூக வேறுபாடு காட்டாமலும் அனைவருடனும் நட்பாக பழகவேண்டும். இப்பருவத்தில் கடினமாக உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். மாணவர்கள் தீய வழியில் செல்லும்போது அது உங்களின் எதிர்காலத்தை முற்றிலும் பாதிக்கும். நன்றாகக் கல்வி பயின்று பள்ளிக்கும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார் பரத் சீனிவாஸ். பள்ளியின் முதல்வர் பெ. சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் பிரபு வரவேற்றார். முடிவில் ஆசிரியர் இன்பராஜ் நன்றி கூறினார்.
Next Story