தொற்று நோய் உற்பத்தி நிலையமாக மாறும் மழைநீர் வடிகால்
Tiruchirappalli (East) King 24x7 |20 July 2024 8:28 AM GMT
வார்டு எண் 28 சுகாதார சீர்கேட்டை மாநகராட்சி கவனிக்குமா
திருச்சி தென்னூர் அண்ணாநகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு ஆகியவற்றில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தற்போது கழிவு நீர் தேங்கியிருக்கும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தெருவின் ஒரத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் 10 மீட்டருக்கு ஒரு இடம் 20 மீட்டர் ஒரு இடம் என ஆங்காங்கே விட்டு விட்டு கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிகால் தற்போது மினி சாக்கடையாக மாறி விட்டது. இதனால் அங்கு தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு தேங்கி கொசு முட்டை உற்பத்தி பகுதியாக மழைநீர் வடிகால் அமைந்துள்ளது. சமீபகாலமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து பல பகுதிகளில் மஞ்சள் காமாலை தொற்று நோயை உருவாக்க வழிவகை செய்கிறது. மேலும் இதுபோன்ற நிலை டெங்கு போன்ற நோய்களை பரப்பும் பகுதியாக தென்னூர் மாறி வருகிறது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வார்டு எண் 28 சுகாதார சீர்கேட்டை சீரமைத்து தர வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
Next Story