வெள்ளகோவிலில் கள் வைத்திருந்தவர் கைது

X
வெள்ளகோவில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சொரியங்கிணத்துப்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள முதியோர் இல்லம் அருகில் பனைமரத்திலிருந்து இறக்கப்பட்ட கள் விற்பனைக்கு வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த கோபிநாத் வயது 34 பிடிபட்டார். அவரிடம் இருந்து 3 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோபிநாத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

