காலையில் வழிப்பறி சம்பவம் மாலையில் நாடகம் அம்பலம்!
Pudukkottai King 24x7 |21 July 2024 5:54 AM GMT
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டையில் டிஎஸ்பி அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் தன்னை தாக்கி பணம், செல்போன், நகைகளை பறித்துச்சென்றதாக வாலிபர் ஒருவர் அப்பகுதி மக்களிடம் கண்ணீருடன் முறையிட்டார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலா னது. தகவலறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட வீடியோ பதிவை ஆய்வு செய்ததுடன் தீவிர விசாரணையில் இறங்கினர். சிறிது நேரத்தில் வழிப்பறி எதுவும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட வாலிபர் நாடகம் நடத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள் ளதாக சமூகவலைதளங்களில் மற்றொரு தகவல் வெளியானது. சமூகவலைதளத்தில் வெளியான இந்த பதிவுகள் நகரமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story