வளர்ச்சி திட்ட பணிகள் எம்.எல்.ஏ., ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் எம்.எல்.ஏ., ஆய்வு
ஆய்வு
ரிஷிவந்தியம் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ரிஷிவந்தியம் ஊராட்சியில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவுநீர் வாய்கால், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கிறதா, வேறு ஏதேனும் தேவை உள்ளதா என குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், புதிதாக ரேஷன் கடை கட்ட இடம், புதிதாக கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது, மழைக்காலம் தொடங்க உள்ளதால், ஏரி வாய்க்காலில் சேதமடைந்த பகுதிகளை சரிசெய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மலையரசன் எம்.பி., மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் வினிதா, தி.மு.க., மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவமுருகன், ஊராட்சி செயலாளர் பால்ராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story