திருக்கோவிலூரில் கபிலர் விழா துவக்கம்
Thirukoilure King 24x7 |21 July 2024 6:05 AM GMT
துவக்கம்
திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகத்தின் 47ம் ஆண்டு கபிலர் விழா துவங்கியது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடு நடந்தது. பண்பாட்டுக் கழக செயலாளர் கோடிலிங்கம் இறை வணக்கம் பாடினார். செயலாளர் தனபால் வரவேற்றார். தொடர்ந்து ஜீயர் தேகளீச ராமானுஜச்சாரியார் சுவாமிகள் விழாவை துவக்கி வைத்து, சமய அறங்கிற்கு தலைமை தாங்கினார். 'மூவர் மொழி வாசல்' தலைப்பில் கவிஞர் விஜயகிருஷ்ணனும், 'ஒரு சொல், ஒரு இல்; ஒரு வில்' தலைப்பில் சுந்தரம் உரையாற்றினர். மாலை 6:00 மணிக்கு பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் முருகன் தலைமையில் சிந்தனை அரங்கம் நடந்தது. பேராசிரியர் சுந்தரம், 'திருவாசகம் எனும் தேன்' என்ற தலைப்பிலும், புலவர் ராமலிங்கம் 'மகிழ்ச்சி மந்திரம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பண்பாட்டுக் கழக செயலாளர் ஆசைத் தம்பி நன்றி கூறினார்.
Next Story