இரட்டை ஏரி தூர்வாரப்பட்டதற்க்கு பாராட்டு விழா!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குரும்பூண்டியில் 50லட்சம் மதீப்பீட்டில் இரட்டை ஏரி தூர்வாரப்பட்டதற்க்கு பாராட்டு விழா மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு முகாமினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் குரும்பூண்டி கிராமத்தில் இரட்டை ஏரி தூர் வாரும் பணி சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ-50லட்சம் மதீப்பீட்டில் நிதியுதவி வழங்கி நடைபெற்று நிறைவடைந்தது. தூர்வாரும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று 1000கும் மேற்பட்ட பனை விதைகள் நட்டும் காது மூக்கு தொண்டை மருத்துவ முகாமினை ரிப்பன் வெட்டியும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 ஏரிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பல்வேறு ஏரிகள் தூரர்வாரப்பட்டு நீர் கொள்ளளவு அதிகரிக்க செய்தும் கரைகள் பல படுத்தப்பட்டுள்ளதாவும் சுமார் 1,500 நிலப்பரப்பிலான ஏரிகளில் ஆக்கிரமிப்பு செயல்பட்டிருந்த 400 ஏக்கர் அளவிலான நிலங்கள் கையக படுத்தப்பட்டுள்ளதாகவும் கரைகள் முழுவதும் மரங்கள் நடப்பட்டு பத்தாண்டுகளுக்கு முன்னதாக துவங்கப்பட்ட ஏரிகள் இன்றைக்கு சோழைவனமாக காட்சியளிப்பதாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை பகுதி குரும்பூண்டி இந்த டெல்டா பாசனத்தை தவிற்த்து குரும்பூண்டி 80 ஏக்கர் நிலப்பரப்பில் 50 லட்சம் மதிப்பீட்டில் கருவேலை மரங்கள் அகற்றப்பட்டு கரைகள் பல படுத்தப்பட்டு நீர் வரத்து கால்வாய்கள் பலபடுத்தப்பட்டு தூர்வாரப்பட்டு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுத்து நிறுத்தவும் விவசாயிகள் பொதுமக்களிடையே நீர்நிலைகளை பாதுகாத்திட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூர்வாரும் பணி நடைபெற்றதாகவும் குரும்பூண்டி பகுதி மிகுந்த வரண்ட பகுதி இங்கு 300கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தான் விவசாயிகள் சாகுபடி செய்வதாகவும் இந்த கிணறுகளுக்கு இந்த ஏரி தூர்வாரப்பட்டுதான் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கையை தந்துள்ளதாகவும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் காமகோடி மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஊர் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
Next Story