திறந்தவெளியில் கிடக்கும் நெல்மூட்டைகள்!

திறந்தவெளியில் கிடக்கும் நெல்மூட்டைகள்!
பொது பிரச்சனைகள்
கந்தர்வகோட்டை வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்திலிருந்து நெல்மூட்டைகளை தார்பாய்போட்டு மூடி பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளவிடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளாள விடுதி ஊராட்சியில் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறார்கள். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை 40 கிலோ எடை கொண்டதை சன்ன ரகம் 924 ரூபாயும், மோட்டா ரகம் 906 ரூபாய் விலை நிர்ணயம் செய்து உள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை முறையாக படுதா போட்டு மூடால் உள்ளதால் தற்சமயம் பெய்யும் மழையில் நெல் நனைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நெல் மூட்டைகளை குடோனுக்கு உடனே அனுப்பினால் நெல் நனையாமல் பாதுகாக்கப்படும் என்பதால் இனி வரும் காலங்களில் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை உடனே குடோனுக்கு அனுப்ப வேண்டும் என்றும், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை பாதுகாக்க உரிய படுதா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story