மோகனூர் காளியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்.

மோகனூர் காளியம்மன் கோயில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமியை முன்னிட்டு பால் குட ஊர்வலம் ஏராளாமான பக்தர்கள் தரிசனம்.
பரமத்தி வேலூர்:21- நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள புகழ் பெற்ற ஆலயமான அருள்மிகு காளியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் பௌர்ணமி அன்று பால் குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு 23-ம் ஆண்டு காளியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் மிக விமர்சையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி பால் குடங்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காளியம்மன் கோயிலை வந்து அடைந்தனர். பின்னர் காளியம்மனுக்கு பால் குடங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காளியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் நடைபெற்றது. இதில் மோகனூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு காளியம்மனை தரிசனம் செய்தனர். கோவில் விழாக்குழுவினரால் கோயிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story