மாவட்ட நுழைவாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் ஏற்படும் தீயினால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம்.
Paramathi Velur King 24x7 |21 July 2024 2:46 PM GMT
பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கட்டப்பட்டுள்ள குப்பைகளில் ஏற்படும் தீயினால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
நாமக்கல் மாவட்டம் நுழைவாயில் பகுதியான பரமத்தி வேலூர் காவிரி பாலத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் வேலூர் பகுதிகளில் உள்ள 14 வார்டிகளில் சேகரிக்கும் குப்பைகளை இந்த பகுதிகளில் கொட்டி வருகின்றனர். மேலும் வேலூர் பகுதிகளில் உள்ள உணவகங்கள்,டீ கடைகள்,சாலையோரக் கடைகள்,இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள் அப்பகுதியில் மலை போல் குவிந்து உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் புகை மூட்டைத்தினால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீ மேலும் பரவாமலும் கட்டுப்படுத்தனர். இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு ஏற்படுவதால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க குப்பைகளை கொட்ட வேற இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story