புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!
Pudukkottai King 24x7 |22 July 2024 3:05 AM GMT
அரசியல் செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிக்கொண்டே இருந்தார், அப்படி என்றால் உண்மையான குற்றவாளியை அவருக்கு அடையாளம் தெரிந்திருக்குமோ என்றுதான் நான் அவ்வாறு கூறினேன். எனக்கு தகுதி இருக்கா இல்லையா என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தோம். அவருக்கு ஏற்கனவே பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டதால் கூடுதல் சிகிச்சை செய்யப்படுகிறது, அந்த அடிப்படையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,அவர் நலமுடன் உள்ளார்,அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் எந்த தவறும் இல்லை, 2026 இலக்கை குறிவைத்த இப்போது திமுக பாயத் தொடங்கியுள்ளது, 2026 தேர்தலில் நாங்கள் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அறுதி பெரும்பான்மையோடு நாங்கள் தனி ஆட்சி கட்டிலில் அமருவோம்,அதே வேளையில் தோழமை கட்சிகளை அரவனைத்து செல்வோம், முதலமைச்சர் ஆற்றி உள்ள பணிகளுக்கு மக்கள் தனி மெஜாரிட்டியில் எங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்துவார்கள்,யாருடைய தயவையும் நம்பி நாங்கள் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் ஏற்படாது-
Next Story