முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாளில் நலத்திட்ட உதவி

X
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.07.2024) முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, முன்னாள் இராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தெரிவிக்கையில்- இக்கூட்டத்தில் பெருவாரியான அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் படைவீரர் நலன் தொடர்பான தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள். அவர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இன்றைய தினம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.1.32 இலட்சம் மதிப்பில் பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் மேஜர் ஜெயக்குமார், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

