திருப்பத்தூரில் பாரத அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
Tirupathur King 24x7 |22 July 2024 8:37 AM GMT
திருப்பத்தூரில் பாரத அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பாரத அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! கடந்த ஏழு மாதத்தில் 595 கொலைகள் நடந்துள்ளன எனவே முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் பேச்சு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார். அப்போது கடந்த ஏழு மாதத்தில் தமிழகத்தில் 595 கொலைகள் நடந்துள்ளன இதன் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் மேலும் தற்போது உள்ள போலீசார் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏவல் துறையாக மாறியுள்ளது என குற்றம் சாட்டி பேசினார். இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் அட்சய முருகன், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் , மாவட்ட கழக நிர்வாகிகள் தினகரன், சரவணன், மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story